×

நீலகிரியில் உரிமம் பெற்ற 420 துப்பாக்கிகளை உடனடியாக போலீசில் ஒப்படைக்க உத்தரவு

 

ஊட்டி, மார்ச் 20: நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை முன் அனுமதியோடு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய விஐபிக்கள், முன்னாள் ராணுவத்தினர், காவல்துறையினர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் (துப்பாக்கி) வைத்திருக்கும் உரிமதாரர்கள், அவற்றை அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு செய்ய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருணா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உரிமம் வாங்கி துப்பாக்கி வைத்து கொள்ள 420 பேர் அனுமதி வாங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திரும்ப ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது வரை சிலர் மட்டுமே ஒப்படைத்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நீலகிரியில் உரிமம் பெற்ற 420 துப்பாக்கிகளை உடனடியாக போலீசில் ஒப்படைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Ooty ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...